You are here

இபோலா கிருமி தொற்று: விழிப்புநிலையில் சிங்கப்பூர்

மேற்கு ஆப்பிரிக்காவை அச் சுறுத்தி வரும் இபோலா கிருமி தொற்று சிங்கப்பூருக்கு வந்து விடாதவாறு இங்குள்ள அமைப்பு கள் விழிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. கிறித்துவ சமய போதக அமைப் பான டபிள்யூ.இ.சி இண்டர் நேஷனல், மேற்கு ஆப்பிரிக்கா வுக்கு தொண்டூழியர்களை அனுப் பும் நடவடிக்கையைத் தற்காலிக மாக நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்தது. மேலும், அங்கு தொண்டூ ழியத்தில் ஈடுபட்டிருந்த பெரும் பாலான சிங்கப்பூரர்கள் நாடு திரும்பிவிட்டதாக அது கூறி யுள்ளது. சில சுற்றுப் பயண முகமைகள் தெ ன் னா ப் பி ரி க் கா வு க் கா ன பயணத் திட்டங்களை ரத்து செய் துள்ளன. இபோலா பாதிப்புக்கு உள்ளான மேற்கு ஆப்பிரிக்காவி லிருந்து கிட்டத்தட்ட 6,000 கிலோ மீட்டர் தொலைவில் தென்னாப் பிரிக்கா இருந்தபோதிலும் அங்கு பயணிகளை அனுப்புவதில்லை என அவை முடிவெடுத்துள்ளன.