You are here

‘ஸ்கில்ஸ் மார்கெட்பிளேஸ்’: வேலை

இளையர்கள் புதிய வேலைக ளையும் வாய்ப்புகளையும் உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் வழி தெரிந்துகொள்ள முடியுமென செங்காங் ரிவர்வேல் பிளாஸாவில் நேற்று நடைபெற்ற ‘டுடூ, டுடூ’ ‘ஸ்கில்ஸ் மார்கெட்பிளேஸ்’ வேலைச்சந்தை நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் டியோ சீ ஹியான் கூறினார். இவ்வாண்டு ஏப்ரல் 30ஆம் தேதி தெம்பனிசில் முதலாம் ‘ஸ்கில்ஸ் மார்கெட்பிளேஸ்’ வேலைச்சந்தை நடைபெற்றது. தேசிய தொழிற்சங்கக் காங்கிரசும் மக்கள் கழகமும் அதனை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. புதிய பட்டதாரிகள், இளம் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகி கள் போன்றோருக்கு வாழ்க்கைத் தொழிலைத் தேர்ந்தெடுக்க இத்திட்டம் உதவியாக இருக்கும். “உலகமயமாதல், தடையற்ற வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகிய வற்றைக் கண்டு நாம் அஞ்சக் கூடாது. இவை அனைத்தும் நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன.