You are here

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தி யர்களுக்கு வாக்குரிமை அளிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு வழிவகுக்கும் வித மாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட் டத்தில் திருத்தம் செய்து, அந்த மசோதா விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்படும் என்று இந்திய அரசு, அந்நாட்டு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க அனு மதிக்கலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இதையடுத்து, அதற்கு வழி வகுக்கும் விதத்தில் சட்டத் திருத்தம் மேற்கொள்வது குறித்து முடிவெடுக்கும்படி கடந்த ஜூலை 14ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இந்திய அரசாங்கத்திற்கு உத்தர விட்டிருந்தது. இந்தச் சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் வெளி நாடுகளில் வசிக்கும் சுமார் 25 மில்லியன் இந்தியர்கள் அஞ்சல் அல்லது இணையம் மூலமாகவோ, அல்லது தங்களின் பிரதிநிதியாக ஒருவரை நியமித்து அவர் மூலமா கவோ வாக்களிக்க முடியும். இப்போதைக்கு ராணுவத்தினர் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க முடியும். அவர்கள் தங்கள் பிரதிநிதியாக ஒருவரை நிரந்தரமாக நியமித்து, அவர்கள் மூலம் வாக்களிக்கலாம்.