You are here

புதுப்பிப்பு: வீட்டுக்காரருக்கு

வீடுகளில் புதுப்பிப்புப் பணிகளைத் திறம்பட செய்துத் தருவதாகக் கூறிவிட்டு பின்னர் அப்படிச் செய்யத் தவறும் ஒப்பந்த வேலைக் காரர்கள் இனி சாக்குப் போக்கு சொல்லி எளிதில் தப்ப முடியாது. சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்க மும் (கேஸ்) சிங்கப்பூர் புதுப்பிப்பு ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சாதனம் வழங்குவோர் சங்கமும் தாங்களா கவே முன்வந்து கூட்டு தகுதி முறை ஒன்றை உருவாக்கி இருக் கின்றன. ஒப்பந்தக்காரர்களுக்குச் சான் றிதழ் கொடுக்க அந்தப் புதிய முறை இடம் தருகிறது. வீட்டு உரிமையாளர்கள் தெரி விக்கக்கூடிய புகார்களைக் குறைப் பது இதன் நோக்கம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த இரு சங்கங்களும் இதனை நேற்று கூட்டாக அறிவித்தன. வீட்டுப் புதுபிப்புப் பணி ஒப்பந் தக்காரர்கள் சொன்னதைப் போல் வேலைகளை முடித்துத் தரவில்லை, சொன்னதைப்போல் அவர்கள் நடந்துகொள்ளவில்லை என வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கும் புகார்கள், கடந்த ஆண்டுகளில் அதிகரித்து வந்துள்ளன.