You are here

தென்னிந்திய திரையுலகை வியப்பில் ஆழ்த்தும் ‘மெர்சல்’

விஜய் நடிப்பில் ஒரு சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த படம் ‘மெர்சல்’. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேசமயத்தில் பல சர்ச்சைகளையும் சந்தித்தது. அதைத் தொடர்ந்து ‘மெர்சல்’ படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. திரையரங்கிற்கு மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில் ‘மெர்சல்’ உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்து இருக்கிறது.

இதன்மூலம் தென்னிந் தியாவின் ‘பாகுபலி’, ரஜினி படத்தைத் தவிர்த்து இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது ‘மெர்சல்’ மட்டுமே எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் தெலுங்கில் ‘மெர்சல்’ படத்தைத் திரையிட தடை விதிக்கப் பட்டிருந்தது. அந்தத் தடையும் தற்பொழுது நீங்கி ‘அதிரந்தி’ என்ற பெயரில் அங்கும் வெற்றி கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழில் விஜய் பேசிய ‘ஜிஎஸ்டி’ வசனங்கள், வடிவேலு பேசிய ‘டிஜிட்டல் இந்தியா’ வசனங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. இந்த வசனங்கள் அனைத்துமே தெலுங்கில் ‘மியூட்’ செய்யப்பட்டு ‘அதிரந்தி’ ஓடிக் கொண்டிருக்கிறது.