You are here

மறுவிற்பனை வீடுகள் $1 மில்லியனை எட்டியது

காமன்வெல்த் டிரைவ், ஹாலந்து வில்லேஜ் வட்டாரங்களில் ஐந்து அறை வீடுகள் மூன்று $1 மில்லி யனை எட்டியுள்ளன. இவையே, பினக்கல்@டக்ஸ்டன் வீடுக ளுக்கு அப்பால் இவ்வாண்டின் அதிகமான தொகையில் பரிவர்த் தனையான வீவக வீடுகளாகும். சொத்து முகவர் நிறுவனமான ‘புரோப்னெக்ஸ்’ வெளியிட்ட அறிக்கையில் புளோக் 50 காமன் வெல்த் டிரைவின் இரு வீடுகளும் அக்டோபரில் $1.035 மில்லியனுக் கும் ஆகஸ்டில் $1.028 மில்லிய னுக்கும் பரிவர்த்தனை செய்யப் பட்டது தெரியவந்துள்ளது.

ஹாலந்து டிரைவின் புளோக் 18‘டி’யில் ஜூலை மாதம் $1.03 மில்லியனுக்கு வீடு விற்பனை யாகியுள்ளது. இவ்வாண்டு பிப்ரவரியில் பீஷானின் ‘நேட்சுரா லோஃப்ட்டில்’ உள்ள டிபிஎஸ்எஸ் வீடு $1.18 மில்லியனுக்கு பரி வர்த்தனையாகி சாதனைப் படைத் தது. டிபிஎஸ்எஸ் வீடுகள் பொது வீடமைப்பாக வகை செய்யப்பட்டா லும் அவை தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு விற்பனை செய்யப் படுகின்றன.

ஹாலந்து வில்லேஜில் வீவக மறுவிற்பனை வீட்டை வாங்கிய வர்கள் 20களில் உள்ள புதுமண தம்பதிகள் என்பது வியப்பிற்குரிய தகவலாகும். பொதுவாக தேவைக் கேற்ப கட்டப்படும் வீடுகளை வாங்கமுடியாத நிலையில் இருக் கும் சற்று வயதானவர்கள் அல்லது இரண்டாவது முறையாக வீடு வாங்குபவர்கள்தான் மறுவிற்பனை வீட்டை அதிகம் விலை கொடுத்து வாங்குவார்கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.