You are here

தோல்வியிலும் நம்பிக்கை இழக்கா சுந்தரம்

தேசிய விளையாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் லெபனானிடம் சிங்கப்பூர் தோல்வி அடைந்தும் நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார் பயிற்றுவிப்பாளர் வி.சுந்தரமூர்த்தி. லெபனானிடம் சிங்கப்பூர் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும், வலிமைமிக்க லெபனான் மேலும் பல கோல்கள் போடாமல் சிங்கப்பூரின் தற்காப்பு பார்த்துக்கொண்டது.

கோல்காப்பாளர் ஹசான் சனி லெபனானின் பல கோல் முயற்சிகளை முறியடித்தார். சிங்கப்பூர் வீரர்களின் தரம் மேம்பட்டு வருவதாக ஆட்டத்துக்குப் பிறகு சுந்தரம் தெரிவித்தார். கடந்த ஓராண்டாக சிங்கப்பூர் குழு ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாதது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றில் வரும் செவ்வாய்க்கிழமையன்று தேசிய விளையாட்டரங்கத்தில் பஹ்ரேனுடன் சிங்கப்பூர் மோதுகிறது.