You are here

ஊழியர்களுக்கான குறைந்த கட்டணப் பயிலரங்குகள்

தேசிய தொழிற்சங்க காங்கிரசின் புதிய திட்டத்தின் கீழ், ஊழியர்கள் மாதம் $10க்கும் குறைவான கட்டணத்தில் சிறிய பயிலரங்கு களில் பங்கேற்கலாம். தரவு அறிவியல் முதல் பொது மேடைப் பேச்சு வரையிலான துறை களில் 60க்கும் மேற்பட்ட பயில ரங்குகள் ‘யு ஃபியூச்சர் லீடர்ஸ் எக்ஸ்சேஞ்ச்’ என்ற புதிய திட்டத் தின் கீழ் நடத்தப்படவுள்ளன. இந்தச் சேவையைப் பயன் படுத்துவதற்கான ஆண்டுக் கட்டணம் $100. என்டியுசி உறுப்பி னர்களுக்கு $30 மட்டுமே. சன்டெக் மாநாடு, கண்காட்சி மையத்தில் நேற்று நடைபெற்ற மாநாட்டில், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங், சந்தா அடிப்படை யிலான இந்தத் திட்டத்தை அறிவித்தார்.

ஊழியர்கள் தங்கள் வாழ்நாளில் மேற்கொள்ளும் பணி மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள உதவுவது இதன் நோக்கம் என்றார். கிட்டத்தட்ட 1,200 நிபுணர்களு டனான கலந்துரையாடலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சான், தங் களைத் தயார்படுத்திக்கொள்வதில் தாங்கள் எதிர்கொள்ளும் மூன்று முக்கிய சவால்களாக நேரமின்மை, நிதிப் பற்றாக்குறை, மனப்போக்கு மாற்றம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட தாகக் கூறினார். குடும்பம், வேலைக் கடப்பாடு கள் போன்றவற்றிலிருந்து பயில ரங்குகளுக்கு நேரம் ஒதுக்குவது வேலை பார்க்கும் பெரியவர்களுக்கு சிரமமானதுதான் என்றார் அவர்.

மேலும், வேலையோ, வருமான உறுதியாக இல்லாத நிலையில் ஒரு சில பேரால் மட்டுமே பயிற்சி வகுப்புகளில் சேர பெரிய அளவில் முதலீடு செய்ய முடியும் என்று அவர் சொன்னார். “நீண்டநேர பயிற்சி வகுப்பு களுக்குப் பதிலாக, பொருத்தமான பாடத்திட்டங்களை சிறிய அளவில் சுருக்கி, ஊழியர்களுக்கு குறைந்த நேரத்தில் எப்படி வழங்க முடியும் என்பதையும் அறிவைப் பெறுவதற் கான கட்டணத்தை பெரிய அள வில் எப்படிக் குறைக்க முடியும் என்பதையும் ஆராய்ந்து வருகி றோம்,” என்று திரு சான் தெரிவித் தார்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள், இந்தத் திட்டத்தில் 10,000 ஊழியர் களை இணைக்க என்டியுசி இலக்குக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் இதன் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 200 சந்தாதாரர்கள் இத்திட்டத்திற்குப் பணம் செலுத்திப் பதிவு செய் துள்ளனர். 1,000 பேர் மூன்று மாத கால சோதனைக் காலத்தில் இணைந்துள்ளனர். இது இலவசம். மாதந்தோறும் கிட்டத்தட்ட நான்கு பயிலரங்குகள் நடத்தப் படும். மாலை நேரத்தில் நடை பெறும் வகுப்புகள் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடிக்கும். இணையத்தில் பாடங்கள் இடம் பெறும்.