You are here

முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த நாயகன்

  • காத்ரீனா

முத்தக்காட்சியில் நடித்தே பெயர் பெற்ற நடிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட திரையுலகில் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்துள்ளார் ஒரு கதாநாயகன். அவர் சல்மான்கான். தற்போது ‘டைகர் ஜிந்தா ஹே’ என்ற படத்தில் காத்ரீனா கைஃப்புடன் இணைந்து நடிக்கிறார் அவர். இது அடிதடிப் படம் என்றாலும் காதல் காட்சிகளும் பரவலாக இடம்பெறுமாம். குறிப்பிட்ட ஒரு காட்சியில் காத்ரீனாவுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று காட்சியை விவரித்தாராம் இயக்குநர். அதைக் கேட்ட சல்மான் முத்தம் எல்லாம் கொடுக்கமுடியாது எனக் கறாராகக் கூறிவிட்டாராம். இத்தனைக்கும் முத்தம் வாங்கும் காத்ரீனாகூட இக்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இயக்குநர் பலமுறை வற்புறுத்தியும் சல்மான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படம் இம்மாத இறுதிக்குள் திரைக்கு வர உள்ளது. படம் நன்றாக வந்திருப்பதாகக் கூறுகிறார் காத்ரீனா.