You are here

செமாக்காவ் தீவில் 14 மாடி உயரத்தில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய காற்றாலை

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய காற் றாலை நேற்று செமாக்காவ் தீவில் திறக்கப்பட்டுள்ளது. இதுவே முதன்முறையாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்சார விநியோக அமைப்போடு இணைக்கப்பட்டுள் ளது. இந்தக் காற்றாலையில் 10.5 மீட்டர் அளவில் மூன்று பிளேடுகள் உள்ளன. 45 நான்கறை வீவக வீடுகளுக்கு மின்சாரத்தை விநி யோகிக்கக் கூடிய அளவிற்கு 100 கிலோ வாட் மின்சாரத்தை இந்தக் காற்றாலை தயாரிக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு செயல்முறை என்ற இந்த மின்சார விநியோக அமைப்பு இந்த வட்டாரத்தின் முதல் பெரிய அளவிலான அமைப் பாகும். இது நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் முயற்சியாகும்.

நிலையான எரிசக்தி பயன் பாட்டை நோக்கிச் செல்லும் சிங்கப் பூரில், அதன் தெற்கு பகுதியில் உள்ள நிலப்பரப்பில் இந்தக் காற் றாலை மின்சாரத்தைத் தயாரிக்கும். ஏழு காற்றாலைகள் வரை அந்தத் தீவில் பொருத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படும். இரண்டாம் கட்டத்தில் இருக் கும் இந்தத் திட்டத்திற்கு பொரு ளியல் வளர்ச்சிக் கழகமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் ஆதரவு வழங்கியுள்ளன. முதல் கட்டத்தில் 4,500 சதுர மீட்டர் அளவில் மின்னழுத்த தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. பெரிய அளவில் லித்தியம்- ஐயொன் எரிசக்தி வைப்பிடமும் ஹைட்ரோஜன் எரிபொருள் நிரப் பும் நிலையமும் அமைக்கப்பட்டுள் ளது.

செமாக்காவ் தீவில் உருவாக்கப் படும் ஏழு காற்றாலைகளில் இது முதலாவது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்