You are here

தயாராகிறார் சிம்பு

பாடல்களைப் பாடவேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் சிறு வயது முதலே தன்னிடம் இருந்துவருவதாக நடிகர் சிம்பு கூறியுள்ளார். பாடல்கள் மீதான ஆர்வம் தன் தந்தை டி.ராஜேந்தரிடம் இருந்து தன்னிடமும் தொற் றிக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். சிம்பு இசையமைப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. இதில் அவரது இசையில் ஐந்து இசையமைப்பாளர்கள் பாடியுள்ளனர். இந்நிலையில் ஊடகப் பேட்டி ஒன்றில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் சிம்பு.

“நான் பாடிய பெரும்பாலான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை நூறு பாடல்களைப் பாடி இருக்கிறேன் என்பதை உணரவே இல்லை. “இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர்கள், இசையமைப்பாளர் கள், உடன் பாடிய பாடகர்கள் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். “நான் எப்போதுமே கற்றுக்கொள்ளும் ஆர்வம் உடையவன் எல்லா இசையமைப்பாளர் களுடனும் வேலை செய்திருப்பது இசையில் பரந்த, பெரிய புரிதலைக் கொடுத்திருக்கிறது,” என்கிறார் சிம்பு. தான் எந்த அவதாரத்தில் இருந்தாலும் தன்னை ஏற்றுக்கொண்டு ரசிகர்கள் ஊக்கப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தன்னைப் பொறுத்தவரையில் நூறு என்பது சாதாரண ஒரு எண் மட்டுமே எனக் கூறியுள்ளார்.