You are here

கிண்டல் செய்தது போதும்: காயத்ரி

முகம் காட்டாமல் தம்மைக் கிண்டல் செய்பவர்களைப் பார்க்க விரும்பு வதாகக் கூறியுள்ளார்  காயத்ரி ரகுராம். தம்மைக் கிண்டல் செய்யும் அனை வரும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக, அதிக கோபம் உள்ளவர்களாக இருப் பதாகவும் அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சிலர் மற்றவர்களை வெட்கமின்றிக் கிண்டலடித்து விட்டு தங்களை உத்தமர்கள் எனக் கூறிக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அத்த கையவர்கள் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாகக் கூறி உள்ளார். ‘பிக் பாஸ்’ ஒரு விளையாட்டு என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். “வேறு வேலையைப் பாருங் கள். முக்கியமான பிரச்சினைகளுக்காகப் போராடுங்கள்.

குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைகள் மீதான வன்முறை, கல்வி, பெண்கள் மீதான வன்முறை, வன் கொடுமை, விவசாயிகள், ‘நீட்’ எனப் பல பிரச்சி னைகள் இருக்கின்றன,” என்றும் காயத்ரி மேலும் கூறியுள்ளார்.