You are here

11 ஆண்டுகளில் பாஜகவின் சொத்து மதிப்பு 627% உயர்வு

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி அந்நாட்டின் பணக் கார அரசியல் கட்சியாக உரு வெடுத்துள்ளது. கடந்த 2004=05 நிதியாண்டில் ரூ.122.93 கோடியாக இருந்த பாஜகவின் சொத்து பதினொரு ஆண்டுகளில் 627% கூடி ரூ.893 கோடியாக (S$187 மி.) உயர்ந்தது. அதே காலகட்டத்தில், இரண்டா வது பணக்காரக் கட்சியாக இருக்கும் காங்கிரசின் சொத்து மதிப்பு ரூ.167.35 கோடியிலிருந்து ரூ.758.79 கோடியாக (S$158 மி.), அதாவது 353.41% அதிகரித்தது. ஜனநாயகச் சீர்திருத்தச் சங் கம், மேற்கு வங்கத் தேர்தல் கண் காணிப்பகம் என்ற இரு தொண் டூழிய அமைப்புகள் இணைந்து ‘தேசிய கட்சிகளின் சொத்துகள், கடன் பொறுப்புகள் பற்றிய பகுப் பாய்வு = நிதியாண்டு 2004-05 முதல் 2015-16 வரை’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந் திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய இந்தியாவின் ஏழு தேசிய கட்சிகள், வருமான வரித் துறை யிடமும் தேர்தல் ஆணையத்திடமும் சமர்ப்பித்த தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் பகுப்பாய்வுக்கு எடுத் துக்கொள்ளப்பட்டன. 2004=05 நிதியாண்டு கணக் குப்படி இந்த ஏழு கட்சிகளின் சராசரி சொத்து மதிப்பு ரூ.61.62 கோடி என்றும் அது 2015=16ல் ரூ.388.45 கோடியாக அதிகரித்தது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. தனது பிரசாரத்தின் காரண மாக கட்சிக்கு நிதியளிப்பது வெளிப்படையாகி இருப்பதுதான் வருமான, சொத்து மதிப்பு உயர் வுக்குக் காரணம் என்று பாஜக தெரிவித்துள்ளது. “அரசியல் நன்கொடைகளைக் காசோலையாகப் பெறுகிறோம். முறையாக வருமான வரித் தாக்க லும் செய்கிறோம்,” என்றார் பாஜக பேச்சாளர் கோபால் அகர்வால்.