You are here

நாவடக்கம் இல்லாமல் பேசுகின்றனர் பாஜக தலைவர்கள் - தா.பாண்டியன்

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனை எந்த மாநி லத்துக்கும் செல்ல விடமாட்டோம் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசி யுள்ளது ஆணவத்தின் உச்சக் கட்டம் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், பொன். ராதாகிருஷ்ணனின் சவாலை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றார். இதுபோன்று நாவடக்கம் இல்லாமல் தொடர்ந்து பேசி வந் தால் தமிழகத்துக்கு வரும் பாஜக தலைவர்களை நடமாடவிடப் போவதில்லை என எச்சரிக்கை விடுத்த அவர், பாஜக தலைவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் கறுப்புக் கொடி காட்டப்போவதா கவும் தெரிவித்தார். “பேரறிவாளனை பரோலில் விடுவித்து கடுமையான கட்டுப் பாடுகளை விதித்ததன் மூலம் தமிழகத்தில் அமித்ஷா ஆட்சி, மோடி தர்பார் நடக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு பரோல் காலத்தை ஆறு மாதத்துக்கு நீடித்து அதற்குள்ளாக பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்வதற்கான நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.