You are here

ராணுவ அமைச்சர் நிர்மலாவுக்கு சீன ஊடகங்கள் பாராட்டு

  • படம்: இந்திய ஊடகம்

பெய்ஜிங்: சிக்கிம் எல்லையில் அண்மையில் சீன ராணுவத் துடன் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை யாடியதை சீனாவின் ஊட கங்கள் வரவேற்றுள்ளன. இந்திய-சீனா எல்லையில் உள்ள நாதுலா கணவாய்க்கு நிர்மலா பயணம் மேற்கொண்ட போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய -திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் பேசினார். மேலும் சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருந்த சீன ராணுவத்தினருடனும் நிர்மலா பேசினார். இதனை சீன ஊடகங்கள் வரவேற்று செய்தி வெளியிட்டுள்ளன. “இந்திய ராணுவ அமைச் சரின் நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தைக் குறைத்து அமைதியை ஏற்படுத்த வழிவகுக்கும்,” என்று சீன ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்திய-சீன எல்லையில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். படம்: இந்திய ஊடகம்