You are here

பள்ளிகளுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை மூடல்

புதுடெல்லி: டெல்லியில் பள்ளி களுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை மூடுவது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியின் குருகிராமில் உள்ள ரயான் அனைத்துலகப் பள்ளியில் 7 வயது சிறுவன் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி கொலை செய்யப்பட்டான். இதில் கைது செய்யப்பட்ட பள்ளியின் உதவியாளர் அருகிலுள்ள மதுக்கடையில் மது அருந்தி இருந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்துப் பள்ளி களுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை மூட கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகப் பள்ளி நிர்வாகங்கள் தங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் பற்றிய தகவல் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.