You are here

அர்ஜெண்டினாவைக் காப்பாற்றிய மெஸ்ஸி

  • படம்: ஏஎஃப்பி

எக்வடோர்: மெஸ்ஸியின் கோல் களால் தப்பிப் பிழைத்த அர்ஜெண் டினா உலகக் கிண்ணக் காற்பந் தாட்டத்திற்கு முன்னேறியது. எக்வடோர் குழுவிற்கு எதிரான இந்த ஆட்டத்தை அர்ஜெண்டினா வாழ்வா சாவா என்ற நிலையில் எதிர்கொண்டது. “உலகின் சிறந்த ஆட்டக்கார ரான மெஸ்ஸியை அர்ஜெண்டினா குழு கொண்டுள்ளது அதிர்ஷ்ட வசமானது. “அனைத்தும் மெஸ்ஸியை மட் டுமே சார்ந்து இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்தப் போட்டியில் அவர் தனது திறனை மிகப்பெரிய அளவில் வெளிப் படுத்தியுள்ளார். “உலகக் கிண்ணப் போட்டி களில் விளையாட வேண்டுமானால் நாம் அவருக்கு உதவியாக இருக் கவேண்டும் எனக் குழுவினரிடம் கூறினேன்,” என்றார் அக்குழுவின் நிர்வாகி சம்போலி. நேற்றைய ஆட்டத்தில் 38வது வினாடியிலேயே முதல் கோலைப் போட்டது எக்வடோர் குழு. ஆனால், அதுவே அக்குழுவின் கடைசி கோலாகவும் அமைந்தது. ஏங்சல் டி மரியா உதைத்த பந்தை 12வது நிமிடத்தில் கோலாக மாற்றிய மெஸ்ஸி எக்வடோரின் முதல் கோலை சமன் செய்தார்.

தென்அமெரிக்கப் பிரிவு பட்டியலில் அர்ஜெண்டினா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. படம்: ஏஎஃப்பி