You are here

தேமுதிக புதிய கட்டுப்பாடுகள்

சென்னை: தேமுதிகவின் செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி யில் இன்று நடைபெற உள்ளது. பொதுக்குழுவில் கட்சிப்பணிகள் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேச உள்ளார். இதுகுறித்து தேமுதிக விடுத் துள்ள அறிக்கையில், “மாவட்டச் செயலாளர்களிடம் அடையாள அட்டை பெற்று நிர்வாகிகள் பொதுக்குழுவில் பங்கேற்கவேண் டும். அடையாள அட்டை இல்லா மல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். “கைபேசி, கேமரா போன்ற சாத னங்களை பொதுக்குழுவில் கொண்டுவர அனுமதி இல்லை. கூட்டத்தில் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் யாரும் விஜயகாந் துக்கு சால்வையோ மாலையோ அளிக்க வேண்டாம்,” என்று கூறப்பட்டுள்ளது.