You are here

ஹாங்காங் தலைவரின் முதல் சட்டமன்ற உரை: நலத் திட்டங்கள் அறிமுகம்

ஹாங்காங்: சமூக நலன், கல்வி, வீடமைப்பு போன்ற துறைகளில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பல்வேறு மக்கள் நலத் திட்டங் களை ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கெர்ரி லாம் தனது முதல் சட்டமன்ற உரையில் அறிமுகம் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் திருமதி லாம் தலைமை நிர்வாகியாக கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி பதவி ஏற்றபின் முதன்முறையாக உரை யாற்றினார். அவரது 40 நிமிட உரையில், வீடமைப்புப் பற்றிய அங்கமே மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் உலகின் விலை உயர்ந்த சொத்துச்சந்தையுடைய ஹாங்காங்கில் வீடு வாங்குவதற் கான புதிய திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். வீடு வாங்க முடியாதவர்களுக் கான “ஸ்டார்ட்டர் ஹோம்ஸ்” திட்டத்தைப் பற்றி அவர் விளக்க மளித்தார். “வீடமைப்புப் பிரச்சினைக்கு மாயமந்திரத்தால் தீர்வுகாண முடி யாது. அதிகாரிகளின் விவேகமும் அவர்களின் புதிய சிந்தனையும் தான் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய துணைபுரிந்துள் ளது,” என்று திருமதி லாம் கூறினார்.