You are here

மண்டாய் பகுதியில் மேலும் உல்லாச வசதி; புது ஹோட்டல்

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பன்யன் ட்ரீ ஹோல்டிங்ஸ் நிறு வனம் சிங்கப்பூரில் மண்டாயில் தனது முதலாவது உல்லாச ஹோட்டலை திறக்கவிருக்கிறது. சிங்கப்பூர் விலங்கியல் தோட் டம், ரிவர் சஃபாரி, நைட் சஃபாரி முதலான பொழுதுபோக்கு அம்சங் களை வார இறுதியில் அனுபவித்து வரும் மக்களுக்கு மேலும் உற்சாக அனுபவம் கிடைக்கவிருக்கிறது. சிங்கப்பூரை தளமாகக் கொண்டு செயல்படும் ஹோட்டல் துறை நிறுவனமான பன்யன் ட்ரீ ஹோட்டிங்ஸ், மண்டாய் பகுதியில் முழு சேவைகளுடன் கூடிய ஹோட்டல் ஒன்றைக் கட்டும். அது கட்டப்பட்டதும் அதுவே சிங்கப்பூரில் இந்த நிறுவனத்தின் முதலாவது விடுமுறை உல்லாச இடமாக இருக்கும். ஹோட்டல் 2023ல் விருந்தினர்களுக்கு கத வைத் திறக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

பன்யன் ட்ரீ ஹோல்டிங்ஸ் நிறுவனம் சிங்கப்பூரில் மண்டாயில் தன்னுடைய முதலாவது விடுமுறை உல்லாச ஹோட்டலை திறக்கவிருக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்