You are here

தேசிய அடையாள அட்டை: மாணவனுக்கு அடி, ஆசிரியர் கைது

மும்பை: மும்பையின் காட்கோப் பகுதியில் செயல்படும் ஆக்ஸ் போர்டு இங்கிலிஷ் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் சுகைல் அன்சாரி என்ற பையனிடம் ஆதார் அட்டை இல்லை என்பதற்காக அந்தப் பையனின் ஆசிரியர் பையனைக் கொடூரமாகத் தாக்கி விட்டார். இதனையடுத்து போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பள் ளிக்கூடத்தின் பிரத்தியேக படச் சாதனம் மூலம் ஷயாம் விஷ்வ கர்மா என்ற அந்த ஆசிரியர் கைதானார் என்று போலிஸ் தெரிவித்துள்ளது. மேல்விசாரணை நடக்கிறது. இந்த விவகாரத்தை தாங்கள் கடைசி வரை விடப்போவதில்லை என்று பையனின் பெற்றோர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளனர். என்றாலும் குற்றச் சாட்டுகளை ஆசிரியர் அறவே மறுக்கிறார்.