You are here

சீனா கண்டனம்: தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்கக் கப்பல்

பெய்ஜிங்: சீனா உரிமை கொண்டாடும் தென்சீனக் கடல் பகுதிக்குள் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் வந்ததால் சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா சீனாவின் எல்லையை மதித்து செயல்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சு நேற்று குறிப்பிட்டுள்ளது. அடுத்த மாதம், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிபராக பதவி ஏற்றபின் தனது முதல் ஆசிய பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். சீனாவுக்கும் செல்ல இருக்கும் நிலையில் அமெரிக்கக் கடற்படையின் இத்தகைய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கடற்பகுதி மற்ற பல ஆசியான் நாடுகளால் உரிமை கோரப்படுகிறது.