You are here

இந்திய விவசாயத்தை அழிக்க சதி: குமுறும் இளம் இயக்குநர்

  • ‘குத்தூசி’ படத்தின் ஒரு காட்சியில் திலீபன், யோகிபாபு.

“இந்தியா ஒரு விவசாய நாடு. அதன் முதுகெலும்பே விவசாயம்தான் என்பது உலக நாடுகள் அத்தனைக்கும் தெரி யும். ஆனால் இந்திய விவசாயத்தின் இன்றைய நிலை என்ன என்பதை அலசியுள்ளேன்,” என்கிறார் குத்தூசி படத்தின் இயக்குநர் ‌ஷிவசக்தி. இந்திய விவசாயத்தை அழிக்க உலகளவில் சதி நடப்பதாக இவர் குற்றம்சாட்டுகிறார். இப்படத்தில் ஏ.ஆர்.முருகதாசின் தம்பி திலீபன், புதுமுகம் அமலா ஜோடி சேர்ந்துள்ளனர். சீனுராமசாமியின் பட்டறையில் இருந்து வந்திருப்பவர் ‌ சிவசக்தி.

“இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்துக்கும் ‘குத்தூசி’க்கும் என்ன தொடர்பு எனக் கேட்டு விடா தீர்கள். ஒரு விஷயத்தைக் குத்திக் காட்டுவதற்கான குறியீடாகத்தான் ‘குத்தூசி’யை நினைக்கிறேன். “நம்மை விவசாயம் பண்ண விடா மல் தடுக்க நினைக்கும் வெளிநாட்டு சக்தியைக் கதாநாயகன் எப்படி முறியடிக்கிறார் என்பதே படத்தின் கதை. இயற்கை விவசாயம்தான் கதைக்கரு. ஆனாலும் காதலும் நகைச்சுவையும் அதிரடியும் கலந்தே சொல்லி இருக்கிறேன்.

“என்னது... ‘இயற்கை விவசாயம் பற்றிய கதையா?’ என்று நிறைய தயாரிப்பாளர்கள் இந்தக் கதையைப் படமாக தயாரிக்கத் தயங்கினார்கள். ஆனால், எங்கள் தயாரிப்பாளர் எம்.தியாகராஜன் சாரிடம் இந்தக் கதையைச் சொன்னதும் உடனே படப்பிடிப்புக்குக் கிளம்பலாம் என்றார். அப்பவே படம் பாதி வெற்றி பெற்ற உணர்வு வந்துவிட்டது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஒரே ஒருவராவது இயற்கை விவசாயம் பக்கம் திரும்பினால் அதுவே எனக்கு மகிழ்ச்சிதான்,” என்கிறார் ‌சிவசக்தி. கல்வராயன் மலைப் பகுதியிலும் சென்னையிலும் முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளனராம். மொத்தம் 54 நாட்களில் முழுப் படத்தையும் முடித்துள்ளனர்.

‘குத்தூசி’ படத்தின் ஒரு காட்சியில் திலீபன், யோகிபாபு.