You are here

‘பனாரஸ் பல்கலையில் கட்டுப்பாடுகள் இராது’

வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் செயல்படும் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் புதிய ஒழுங்கு முறை தலைமை அதிகாரியாக ரோயோனா சிங் என்ற பெண் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்தப் பல்கலைக்கழகத் தின் 101 ஆண்டு வரலாற்றில் இந்தப் பதவிக்கு முதன் முதலாக இப்போது ஒரு பெண் பொறுப்பேற்று இருக்கிறார். பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கும் மாணவி களுக்கு உடை கட்டுப்பாடு இருக்காது. மதுபான கட்டுப்பாடும் இருக்காது. அசைவ சாப்பாட்டையும் உணவுவிடுதியில் அவர்கள் பெறலாம் என்று அந்தப் பெண்மணி அறிவித்தார். “இந்தப் பல்கலைக்கழகம் பெண்களுக்குக் கடந்த காலத்தில் எந்த கட்டுப் பாட்டையும் விதிக்கவில்லை. இதுபோலவே எதிர்காலத்திலும் எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. இங்கு பயிலும் எல்லா மாணவிகளுக்கும் வயது 18க்கு மேல். ஆகையால் மதுபானத்தைப் பொறுத்தவரை ஏன் நாம் தலையிட வேண்டும்?,” என்றார் ரோயோனா சிங்.