You are here

பல வாகனங்கள் சிக்கிய விபத்தில் போலிஸ் அதிகாரி காயம்

கிளமெண்டி ரோட்டில் நேற்று நண்பகல் நிகழ்ந்த சாலை விபத்தில் போக்கு வரத்து போலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இரு கார்களும் அந்த அதிகா ரியின் மோட்டார் சைக்கிளும் இந்த விபத்தில் சிக்கின. வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ் சாலையை நோக்கிச் செல்லும் கிள மெண்டி ரோட்டின் மூன்று தடச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 28 வயது போலிஸ் அதிகாரி காயமுற்றார் என்று போலிஸ் உறுதிப்படுத்தியது. விபத்து நடந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை அனுப்பிய தாகவும் அந்த போலிஸ் அதிகாரி சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல் லப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. போலிஸ் விசாரணை தொடர்கிறது.

ஆக வலது தடத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென்று நடுத்தடத்துக்கு மாற முயன்றபோது, நடுத்தடத்திலிருந்த கார் உடனடியாக பிரேக்கை அழுத்தியதால், பின்னால் வந்து கொண்டிருந்த போக்குவரத்து போலிஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிள் அந்த காரின் பின்புறத்தில் மோதியது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. அதிகாரிக்கு கைகளிலும் கால்க ளில் காயங்கள் ஏற்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் காயமடைந்த போக்குவரத்து போலிஸ் அதிகாரிக்கு ஒருவர் உதவுகிறார். படம்: ROADS.SG