You are here

உதவி தேவைப்படுவோரைச் சென்றடையும் குடியிருப்பாளர் தொண்டூழிய முயற்சி

  • படம்: சாவ் பாவ்

உதவி தேவைப்படும் மோல்மென்= கேர்ன்ஹில் குடியிருப்பாளர்கள் தங்கள் திறன்பேசி மூலம் இனி உதவி பெறலாம். இவர்களுக்கு உதவி செய்யும் நிலையில் உள்ள தொண்டூழியர் களை இவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ‘மோ=-கே கேர்ஸ்’ எனும் புதிய திறன்பேசி செயலி இம்மாதப் பிற்பகுதியில் அறிமுகம் காணவுள்ளதாக தஞ் சோங் பகார் குழுத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் மோல் மென்-கேர்ன்ஹில் தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் தெரிவித்துள்ளார். கல்வி துணைப் பாட வகுப் புகள், முடி வெட்டுதல், ஆகியவற் றுடன் நட்பு நாடி வருவோருக்கும் உதவி வழங்கப்படும். இந்த திறன்பேசி செயலியைப் பயன்படுத்தாதவர்கள் இது குறித்து சமூக மன்றங்கள், குடி யிருப்பாளர்கள் குழுக்களை அணுகி உதவி பெறலாம். “எங்கள் தொகுதியில் 88 விழுக்காட்டினர் தனியார் வீடு களில் வசிக்கின்றனர். இவர்கள் உதவி வழங்கும் நிலையில் இருப் பதோடு உதவி செய்யவும் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.

வசதி குறைந்த குடியிருப்பாளர் ஒருவர் $2 பற்றுச்சீட்டைக் கொடுத்து ‘மோ-கே கேர்ஸ்’ உதவித் திட்டத்தில் இணைந்துள்ள ஒரு கடையிலிருந்து ரொட்டியை வாங்கிக் கொள்கிறார். அருகில் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு மெல்வின் யோங். படம்: சாவ் பாவ்