You are here

சல்வார் கமீஸ் அணிந்த மாணவிகளுக்கு அபராதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் உடை கட்டுப்பாடு விதிகளை மீறி சல்வார் கமீஸ் அணிந்த 19 மாணவியருக்குத் தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் அடூர் அருகே சாய லோடே என்ற இடத்தில் மவுன்ட் ஜியான் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவியர் 19 பேர் செப்டம்பர் 19ஆம் தேதி கல்லூரி வளாகத்திற்கு வெளியே நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைவரும் உடை கட்டுப் பாடான சேலை அணியாமல் சல்வார் கமீஸ் அணிந்து சென்று இருந்தனர். இதனால் 19 பேருக்கும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டு எச்சரிக்கை கடிதம் அனுப்பப் பட்டது. மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகளில் ஈடு பட்டால் வகுப்பறையில் அனு மதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய மாண வியர்கள், “நிகழ்ச்சி நடந்த பகுதியில் கனமழை பெய்தது. எனவே சல்வார் கமீஸ் உடை அணிந்து சென்றோம்,” என்று கூறினர். “சேலை அணிந்து சென்று இருந்தால் மிகவும் சிரமப்பட்டு இருப்போம். “கல்லூரி வளாகத்திற்கு வெளியே நடந்த நிகழ்ச்சி என் பதால் உடை கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவில்லை,” என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் சமூக வலைத் தளங்களில் இந்த விவரம் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இதனால் கல்லூரி நிர்வாகம் மாணவியர்களுக்கு வழங்கிய எச்சரிக்கை கடிதத்தைத் திரும்பப் பெற்றுள்ளது. மாணவியர்கள் அப ராதம் செலுத்தாமல் வகுப்பு அறைக்குச் செல்லவும் அனு மதிக்கப்பட்டனர்.