You are here

ஆஸி. வீரர்கள் பேருந்து மீது தாக்குதல்; இருவர் கைது

புதுடெல்லி: இந்தியா விற்கு எதிரான 20 ஓவர் தொடரின் 2வது போட்டியை வென்ற ஆஸ்திரேலிய அணியினர் சென்ற பேருந்தின் சன்னல் களைக் கல்லால் அடித்து நொறுக்கினர் கௌகாத்தி ரசிகர்கள். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விளை யாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நம் நாட்டிற்கு வரும் வீரர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது நமது கடமையாகும்,” எனக் கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அஸ்வின், “விருந்தினர் களை உபசரிப்பதில் நாம் சிறந்தவர்கள். ஆனால், இந்தக் கல் வீச்சு சம்பவம் உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்கு களங் கத்தை ஏற்படுத்தும்,” என்று தெரிவித்தார். இதற்கிடையில், இச்சம்பவம் தொடர் பாக இருவரைக் கைது செய்த போலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.