You are here

ஜயண்ட்-17 இயந்திரங்கள்

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜயண்ட் பேரங்காடி நிறுவனம் சிங்கப்பூரிலேயே ஆகப் பெரிய, பலதரப்பட்ட பொருட்களைத் விற்கும் இயந்திர வளத்தை தான் அமைத்திருப்பதாக அறி வித்து இருக்கிறது. ‘வெண்ட்மார்ட்’ எனப்படும் அந்த 17 இயந்திரங்கள் கூடம் தெம்பனிசில் இருக்கும் ஜயண்ட் பேரங்காடியின் நுழைவாயிலில் வைக்கப்படும். மேலும் ஐந்து இயந்திரங்கள் ஜூரோங்கில் இருக்கும் ஐஎம்எம் கட்டடத்தில் உள்ள இந்தப் பேரங்காடியில் டிசம்பர் 31 வரை செயலில் இருக்கும்.

இந்த இயந்திரங்களிலிருந்து சுடச்சுட உணவு, விளையாட்டுப் பொருட்கள், அழகு சாதனங்கள், வாழ்க்கைப் பாணி பொருட்கள், மீன் உணவு, ஹலால் உணவுகள் முதலான பலவற்றையும் வாடிக் கையாளர்கள் பெற முடியும். இவற்றோடு, ஜயண்ட் நிறுவனம் ‘மர்மப்பெட்டி’ என்ற ஓர் இயந்திரத்தையும் சொந்தமாக உருவாக்கி இருக்கிறது. அதில் 10 வெள்ளி செலுத்தினால் அதிக மதிப்புடன் கூடிய ஒரு பொருள் உங்களுக்கு கிடைக் கும். அது உங்களை வியப்பில் ஆழ்த்துமெனக் கூறப்படுகிறது.

தெம்பனிசில் உள்ள ஜயண்ட் ஹைப்பர்மார்ட் கடை நுழைவாயிலில் 17 இயந்திரக் கூடம் உள்ளது. இவை விளையாட்டுப் பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றையும் விற்கக்கூடியவை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்