You are here

‘ஜெம்’ கடைத்தொகுதி கார் நிறுத்துமிடத்தில் தீ

ஜெம்’ கடைத்தொகு யில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த கடைத் தொகுதியின் அடித்தள கார் நிறுத்தும் இடத்தில் இருந்த கார் ஒன்றின் இயந்திரத்தில் இருந்து தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரி வித்தது. படைக்கு நண்பகல் 12.40 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட் டது. சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து சேர்ந்த அவர்கள் தீயை உடனடியாக அணைத் தனர். இதில் யாருக்கும் காயமில்லை என அவர் கள் தெரிவித்தனர். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சி டம் பேசிய நிகழ்ச்சி ஏற் பாட்டு அதிகாரி திரு பாஸ்கரன், இரண்டாம் அடித்தளத்தில் தீ மூண்டாலும் மூன்றாம் அடித்தளம் வரை புகை பரவியதாகத் தெரிவித் தார். இதனால், அவ்விடத்தில் பர பரப்பும் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் குழப்பம் ஏற்பட்டதாக வும் அவர் கூறினார்.