You are here

கோலாலம்பூர்=சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டம் தொடர்பான மோசடி

கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதி விரைவு ரயில் திட்டத்தை மைய மாக வைத்து பல மோசடிகள் நடந்து வருகின்றன என்றும் இந்த மோசடியால் பலர் பாதிக்கப்படலாம் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது. மோசடிக்காரர்கள் பொய்யான குத்தகைகள், முறிகள், கட்டுமான வரைபடங்கள் போன்றவற்றைக் காட்டி, தங்கள் ‘திட்டங்களில்’ முதலீடு செய்யுமாறு அப்பாவி மக்களை ஏமாற்றக்கூடும் என்று ஆணையம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த மோசடி தொடர்பான எச்சரிக்கையை விடுத்தது. மேற்கூறப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூர் அல்லது மலேசிய அமைப்புகளால் வெளியிடப்பட்டவை என்று மோசடிக்காரர்கள் சொல்லக்கூடும் என்று கூறிய ஆணை யம், யாராவது இப்படிப்பட்ட ஆவணங்களைக் காட்டி தங்கள் கணக்குகளில் பணத்தை மாற்றிவிடும்படி கேட்டுக் கொண்டால் அதுபற்றி உடனடியாக போலிசில் புகார் கொடுக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது. மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த அதிவிரைவு ரயில் திட்டம் 2026ஆம் ஆண்டு இறு திக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.