You are here

மோதல்: சந்தானம் மீது போலிசில் புகார்

சென்னை: பண விவகாரம் கார ணமாக ஏற்பட்ட மோதலை அடுத்து பிரபல திரைப்பட நடிகர் சந்தானம் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து அவர் தலைமறைவாகி விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நகைச்சுவை நடிகராக அறிமுக மாகி தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் சந்தானம். இவர் தனது நண்பர் சண்முக சுந்தரத்துடன் இணைந்து சென்னை அருகே உள்ள குன்றத் தூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைக் கட்ட திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக பெருந்தொகையை சண்முகசுந்தரத்திடம் கொடுத்த தாகவும் சில மாதங்களில் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிகிறது.

இதையடுத்து தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார் சந்தானம். ஆனால் சண்முகசுந்த ரமோ பாதி தொகையை மட்டுமே கொடுத்ததாகவும் மீதி தொகை யைத் தராமல் பல மாதங்களாக இழுத்தடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சண்முகசுந்தரத்தை பார்க்கச் சென்றுள்ளார் சந்தானம். அப் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டு அது கைகலப்பில் முடிந்துள்ளது. இதையடுத்து சண்முகசுந்தரத் தையும் அவருடன் இருந்த பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்தையும் சந்தானம் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.