You are here

ரசிகர்களுக்காக கலங்கிய கதாநாயகி

ரகுல் பிரீத் சிங்கின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு அண்மையில் திருப்பதியில் நடைபெற்ற சம்பவமே நல்ல சாட்சி என்கிறார்கள் திரையுலகப் புள்ளிகள். திருப்பதியில் ஜவுளிக்கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார் ரகுல். இந்நிகழ்வில் வேறு சில பிரமுகர்களும் பங்கேற்றனர். எனினும் ரகுல் பிரீத் தான் சிறப்பு விருந்தினர் என விளம்பரப் படுத்தப்பட்டது. இதையடுத்து அவரைக் காணவும், கைபேசியில் படம்பிடிக்கவும் ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த கூடுதல் போலிசார், ரசிகர்களை கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டனராம். ஆனால் ரசிகர்களோ அதைக் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து வேறு வழியின்றி கூட்டத்தினர் மீது போலிசார் தடியடி நடத்தி உள்ளனர். தன்னைக் காண வந்த ரசிகர்கள் மீதான தடியடி ரகுல் பிரீத் சிங்கை கண்கலங்க வைத்துவிட்டதாம். வீடு திரும்பிய பிறகு ரசிகர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டதா என நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.