You are here

ஆஸியின் கூடுதல் நேர கோல்; சிதைந்தது சிரியாவின் கனவு

  • படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: உலகக் கிண்ணக் காற்பந்திற்குள் நுழைய வேண்டும் என்ற சிரியாவின் கனவைத் தகர்த்தது ஆஸ்திரேலியா. இக்குழுக்கள் மோதிய தகுதிச் சுற்று ஆட்டத்தின் இரண்டாவது சுற்றுப் போட்டி நேற்று ஆஸ்திரே லியாவில் நடந்தது. ஏற்கெனவே சிரியாவின் சொந்த மண்ணில் நடந்த முதல் சுற்று ஆட்டம் 1=1 எனச் சம நிலையில் முடிந்தது. எனவே நேற்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. சிரியாவின் அல் சோமா 6வது நிமிடத்தில் புகுத்திய கோலால் அக்குழு முன்னிலைப் பெற்றது. அடுத்த சில நிமிடங்களிலேயே பதிலடி கொடுத்தது ஆஸ்திரேலியா.

அக்குழுவின் கேஹில் 13வது நிமிடத்தில் புகுத்திய கோலால் ஆட்டம் 1=1 எனச் சமநிலை கண்டது. அதன் பிறகு இரு குழுக்க ளுமே கோல் எதுவும் போடாத நிலையில், வெற்றியை நிர்ணயிக்க ஆட்டம் கூடுதல் நேரம் சென் றது. கூடுதல் நேரத்தின் போது 109வது நிமிடத்தில் கேஹில் மற்றோர் கோலைப் புகுத்தினார். கேஹில்லின் இந்த இரண் டாவது கோலைத், தனக்குக் கிடைத்த ‘பிரி கிக்’ வாய்ப்பு மூலம் சமன் செய்ய முயன்றார் சிரியாவின் அல் சோமா. ஆனால் அவர் உதைத்த பந்து கோல் வலைக்குள் செல்லாமல் கோல் கம்பத்தை உரசிச் சென் றது.

ஆஸ்திரேலியாவின் மேத்யூ லெக்கி (இடது), சிரியாவின் ஸாகிர் அல்மெடானி. படம்: ராய்ட்டர்ஸ்