You are here

போலந்து, எகிப்து குதூகலம்; வாய்ப்பிழந்த ஸ்காட்லாந்து சோகம்

  •  படம்: ராய்ட்டர்ஸ்

லுபலானா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை ஸ்காட்லாந்து நழுவவிட்டுள்ளது. ‘எஃப்’ பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இரண்டு சுற்று ஆட்டங்கள் கொண்ட தகுதிச் சுற்றுக்கு முன்னேறும் இலக்குடன் சிலோவேனியா வுக்கு எதிராக நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து களமிறங்கியது. ஆட்டத்தின் 32வது நிமிடத் தில் லீ கிரிவித்ஸ் ஸ்காட் லாந்தின் முதல் கோலைப் போட்டார். இ டை வே ளை யி ன் போ து ஸ்காட்லாந்து 1-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆனால் பிற்பாதி ஆட்டத்தில் சிலோவேனியா அதன் தாக்கு தல்களை தீவிரப்படுத்தியது. ஆட்டத்தின் 52வது நிமிடத் தில் ஸ்காட்லாந்து ஆட்டத்தைச் சமன் செய்தது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் போராடிய ஸ்காட்லாந்து ஆட்டம் முடிய கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருந்த போது இரண்டாவது கோலைப் போட்டது. இலக்கை அடைந்து விட்டதாக எண்ணி கொண் டாடிய ஸ்காட்லாந்தின் கொண் டாட்டம் நீடிக்கவில்லை. ஆட்டம் முடிய சில வினாடி கள் மட்டுமே இருந்தபோது சிலோவேனியா மீண்டும் ஆட்டத்தைச் சமன் செய்தது. எஞ்சியிருந்த ஒவ்வொரு வினாடியையும் பயன்படுத்தி எப்படியாவது வெற்றி பெற ஸ்காட்லாந்து முயற்சி செய்தது. ஆனால் ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

பந்து வலைக்குள் சென்று வெற்றி பறிபோனதைப் பார்த்து மனமுடைந்த ஸ்காட்லாந்து கோல்காப்பாளர். படம்: ராய்ட்டர்ஸ்