You are here

இங்கிலாந்து வெற்றி

  • படம்: ஏஎஃப்பி

வினியஸ்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றை இங்கிலாந்து தோல்வி இன்றி முடித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிலோவேனியாவை 1=0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்து உலகக் கிண்ணப் போட்டிக்கு இங்கிலாந்து ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. இதையடுத்து, அதன் கடைசி தகுதிச் சுற்று ஆட்டத்தில் லித்துவேனியாவுடன் இங்கிலாந்து மோதியது. லித்துவேனியாவின் விளையாட் டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தை 1-0 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி ஹேரி கேன் கோல் போட்டார்.

இது இங்கிலாந்துக்காகக் களமிறங்கிய கடந்த ஏழு ஆட்டங்களில் அவர் போட்ட ஆறாவது கோல். சிலோவேனியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் இங்கிலாந்தின் வெற்றி கோலை ஹேரி கேன்தான் போட்டார். பத்து புள்ளிகளுடன் இங்கி லாந்து ‘எஃப்’ பிரிவில் முதலிடத் தைப் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்து சிறப்பாகச் செயல்படவேண்டு மாயின் அக்குழுவின் வீரர்கள் அனைவரும் தரமான வகையில் பங்களிக்கவேண்டும் என்று கேன் கூறினார்.

பந்தை நோக்கிப் பாயும் இங்கிலாந்தின் டெலி அலியை (நடுவில்) லித்துவேனிய வீரர்கள் கீழே தள்ளியதால் இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியை கோலாக்கினார் ஹேரி கேன். படம்: ஏஎஃப்பி