You are here

புது முயற்சிகள் பிடிக்கும் - நிக்கி கல்ராணி

  • நிக்கி கல்ராணி

மொழி எப்போதுமே தமக்கு ஒரு தடையாக இருந்ததில்லை என இளம் நாயகி நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார். புது முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்கிற உத்வேகம் எப்போதுமே தம்மிடம் இருந்து வருவதாகவும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நாயகிகளின் பட்டியலில் நிக்கிக்கும் இடம் கிடைத்திருக்கிறது. வெறும் கவர்ச்சிப் பொம்மையாக மட்டுமே வந்து போகாமல், நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்து அண்மையில் வெளியான ‘ஹரஹர மஹாதேவகி’ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

“வயது வந்தோருக்கான நகைச்சுவையை அதிகம் கொண்ட படங்களில் நடிக்கப் பல கதாநாயகிகள் தயங்குவார்கள் என்பது உண்மைதான். பொதுவாக இத்தகைய படங்களைக் கதாநாயகிகள் விரும்புவதில்லை. இந்தப் படத்தில் கல்லூரிப் பெண்ணாக நடித்திருக்கிறேன். “தமிழ் தெரியாததால் நிறைய வசனங்கள் புரியவில்லை. ஆனால், இதில் நான் பேசியுள்ள வசனங்களின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்ட பிறகே நடித்தேன். பெண்களைத் தவறாகச் சித்திரிப்பது, ஆபாசமாகப் பேசுவது போன் றவை படத்தில் இல்லை,” என்பதே நிக்கி அளித்துள்ள விளக்கம்.