You are here

மொழித் திணிப்பால் விளையும் சீர்கேடுகளை விளக்கும் ‘பாடம்’

மொழித் திணிப்பு விவகாரத்தில் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே நடக்கும் போராட்டமாக உருவாகியுள்ளது ‘பாடம்’. புதுமுகங்கள் கார்த்திக், மோனா ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். விஜித் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். “தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் மீது ஆங்கில கல்வியையும் மொழியையும் திணிப்பதால் நடக்கும் சீர்கேடுகள் பற்றிய படம் இது. ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், வாழ்க்கை முறையல்ல. இது பலருக்குப் புரிவதில்லை. இதை மையமாக வைத்து ஒரு மாணவனுக்கும், ஆசிரியருக்கும் நடக்கும் போராட்டமே கதை,” என்கிறார் இயக்குநர் ராஜசேகர்.