You are here

வெற்றிக்கு அடித்தளமிட்ட மாற்று ஆட்டக்காரர் ரொனால்டோ

  • அண்டோரா குழுவிற்கு எதிராக கோல் புகுத்திய போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ (நடுவில்). படம்: ஏஎஃப்பி

அண்டோரா: அண்டோரா குழு விற்கு எதிரான உலகக் கிண்ணக் காற்பந்துத் தகுதிச் சுற்று ஆட்டத் தில் மாற்று ஆட்டக்காரராகக் களம் இறங்கிய ரொனால்டோ போர்ச்சுகல் குழுவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். ரொனால்டோ இல்லாமல் களம் இறங்கிய போர்ச்சுகல், அண்டோரா குழுவின் தற்காப்பு அரணை உடைக்க முடியாமல் திணறியது. இதனால் முதல் பாதி ஆட்டம் முழுவதும் போர்ச்சுகல் கோல் போட முடியாமல் தடுமாறியது. இந்நிலையில், பிற்பாதி ஆட் டத்தில் மாற்று ஆட்டக்காரராகக் களமிறக்கப்பட்டார் ரொனால்டோ. மரியோ உதைத்த பந்து தன் னிடம் வந்தபோது மின்னல் வேகத்தில் செயல்பட்ட நட்சத்திர வீரர் ரொனால்டோ அதைக் கோலாக மாற்றி வெற்றிக்கு அடித் தளமிட்டார். ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்தபோது இரண்டாவது கோலைப் புகுத்தினார் டிசில்வா. இறுதியில் அண்டோராவை 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது போர்ச்சுகல்.

அண்டோரா குழுவிற்கு எதிராக கோல் புகுத்திய போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ (நடுவில்). படம்: ஏஎஃப்பி