You are here

புருணை காட்டில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கப்பூர் ராணுவத்தினரைச் சந்தித்த பிரதமர்

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புருணை சென்றிருக்கும் பிரதமர் லீ சியன் லூங், அங்குள்ள தெம் புரோங் காட்டுப் பகுதியில் பயிற்சி யில் ஈடுபட்டிருக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்களை நேற்று சந்தித்தார். சிங்கப்பூர் காலாட்படைப் பிரிவு, 6வது பட்டாலியன் வீரர்களுடன் பிரதமர் லீயும் அவரது துணைவி யார் ஹோ சிங்கும் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டனர். சிங்கப்பூர் ஆயுதப் படையின் முன்னாள் பிரிகேடியர் ஜெனரலான திரு லீ, சிங்கப்பூர் படை வீரர் களின் கடப்பாட்டை மெச்சினார். எதார்த்த சூழலில், அதே நேரத்தில் பாதுகாப்பான சூழலில் பயிற்சியில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை யும் அவர் வலியுறுத்தினார். “இங்கு வந்துள்ள சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள் காட்டுப் பகுதியைப் பற்றி அறிந்து வருகின் றனர். தங்களுக்கு உரமேற்றிக் கொள்ளும் அவர்கள், தங்களைப் பற்றியும் அறிந்துகொள்கின்றனர். இது மதிப்புமிக்க விஷயம்,” என்றார் திரு லீ.

பிரதமர் லீ சியன் லூங்கும் அவருடைய துணைவியார் ஹோ சிங்கும் புருணையின் தெம்புரோங் காட்டுப் பகுதியில் நடந்துசென்று அங்கு பயிற்சி மேற்கொண்டு வரும் சிங்கப்பூர் ராணுவத்தினரைச் சந்தித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்