You are here

ஈராக்கில் மன ஊக்கத்துடன் சிங்கப்பூர் துருப்பினர் தொண்டு

  • படம்: தற்காப்பு அமைச்சு

தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், ஈராக்கில் தொண்டாற்றும் சிங்கப்பூர் துருப்பினரை நேற்று சந்தித்தார். அவர்கள் பெரும் மனஊக்கத்துடன் இருப்பதாக டாக்டர் இங் அறிவித்தார். ஈராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் அமைப்பு மூலம் பல மிரட்டல்கள் இடம்பெறுகின்றன. அவற்றை எதிர்த்து பன்னாட்டு கூட்டணிப் படை போராடி வருகிறது. அந்தப் படையினருக்கு மருத்துவ ஆதரவு வழங்குவதற்காக இந்த ஆண்டு ஜூன் முதல் சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் மருத்துவக் குழு ஈராக் நாட்டில் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஐஎஸ் அமைப்பை எதிர்த்து ஈராக்கில் போராடி வரும் அனைத் துலக கூட்டணிப் படையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து நாடுகளின் துருப்புகள் இடம்பெற்று இருக்கிறார்கள். ஈராக்கில் சிங்கப்பூர் ஆயுதப் படை மருத்துவக் குழுவின் பணி கள், பொறுப்புகள் பற்றி துணைப் பிரதமருக்கு விளக்கப்பட்டது. அந்தக் குழுவின் ஆற்றல்களை எடுத்துக்காட்டும் திறன்விளக்கக் காட்சியை டாக்டர் இங் பார்வை யிட்டார்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தற்காப்புப் படைகளும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னை (நடு) வரவேற்றன. படம்: தற்காப்பு அமைச்சு