You are here

‘வசந்தம் ஸ்டார் 2017’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி

வசந்தம் ஸ்டார் பாட்டுப் போட்டி யின் பிரம்மாண்ட இறுதிச் சுற்று ‘மீடியாகார்ப்’ வளாகத்தில் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இறுதிச் சுற்றில் சுவாதி=நந்திதா, ‌ஷீதல்= கீர்த்தனா நிஷ்மேன்= ஷோபனா ஆகிய மூன்று ஜோடி கள் ‘வசந்தம் ஸ்டார் 2017’ பட்டத்தை வெல்ல போட்டியிடு வார்கள். 12 வார கடும் சவாலைக் கடந்து இந்த இறுதிச் சுற்றுக்கு இவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இறுதிப் போட்டியில் பட்டம் வெல்லும் ஜோடி 15,000 வெள்ளி ரொக்கப் பரிசையும் பெறுவார்கள். இந்நிகழ்ச்சியில் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள் கிறார். வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ளலாம். வசந்தம் ஒளிவழியில் நேரலையாக ஒளி பரப்பு செய்யப்படும்.