You are here

ஜப்பானிடம் அடைந்த வீழ்ச்சியின் 75வது ஆண்டு நினைவூட்டும் கண்காட்சி

  • படம்: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம்

சுதாஸகி ராமன்

வரலாற்றுச் சம்பவங்களை புத்தகங் களில் படித்துத் தெரிந்துகொள்வது பொதுவான நடைமுறை. ஆனால், காலத்திக்கேற்ற மாறுதலாக மின் னிலக்க வடிவத்தில் போர்க்கால அனுபவங்களைப் பதிவுசெய்வது முதலான உத்திகளைப் பயன் படுத்தியுள்ளது ‘விட்னஸ் டு வார்: ரிமம்பரிங் 1942’ எனும் கண்காட்சி. எதிர்காலச் சந்ததியினர் சிங்கப்பூர் வரலாற்றை எளிதாகப் புரிந்து கொள்ள இத்தகைய முயற்சிகள் உதவும். இரண்டாம் உலகப் போரின் போது சிங்கப்பூரை ஜப்பானியர்கள் ஆக்கிரமித்தனர். அந்தக் காலத் தில் வாழ்ந்த தமது 82 வயது தாத்தாவிடம் போர்ச் சம்பவங் களைப் பற்றியும் மக்கள் வாழ்ந்த முறையைப் பற்றியும் கேட்டு அதனைப் பதிவு செய்துள்ளார் பரணிதரன். பெரும்பாலான வரலாறு வகுப்பு களில் பாடப் புத்தகங்களைக் கொண்டு கற்பிக்கப்படுகிறது. எழுத்து வடிவிலான வரலாற்றுப் பாடங்கள், இப்போது கண்காட்சி யாக உருவம் கண்டுள்ளன. இரண்டாம் உலகப் போரைப் பற்றிய இந்தக் கண்காட்சியில் இளையர்களுக்கு ஆர்வமூட்டும் பல அம்சங்கள் அமைந்துள்ளன.

போர்க்கால அனுபவங்களை தாத்தா பாலசாமியிடம் கேட்டு காணொளியாகப் பதிவுசெய்த பேரன் பரணிதரன் (இடது). இந்தத் திட்டப்பணியில் தே.பரணிதரனுக்கு உதவிய ஷாருல் இஸான். படம்: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம்