You are here

சிங்கப்பூர்-கோலாலம்பூர் வேக ரயில் திட்டத்தில் சீனா விருப்பம்

  • படம்: சாவ் பாவ்

சிங்கப்பூர்-மலேசியா அதிவேக ரயில் திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்பும் சீன நிறுவனங் களுக்கு சிங்கப்பூர் ஆதரவு அளிக்கும் என்று பெய்ஜிங் நம்பு கிறது. சீன பிரதமர் லி கெச்சியாங் இவ்வாறு தெரிவித்ததாக சின் ஹுவா செய்தி நிறுவனம் குறிப் பிட்டுள்ளது. சீனாவிடம் தொழில்நுட்பத்தில் அனுகூலம் வாய்ந்த, பாதுகாப்பான, நம்பத்தகுந்த, செலவு சிக்கனமான அதிவேக ரயில் தொழில்நுட்பம் இருக்கிறது என்று சீன பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்குடன் நடத்திய பேச்சின் போது சீன பிரதமர் இவ்வாறு தெரிவித்ததாக சின்ஹுவா தெரி வித்து உள்ளது.

சிங்கப்பூர் பிர தமர் இம்மாதம் 19 முதல் 21 வரை சீனாவுக்கு அதிகாரபூர்வமாகப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரையும் கோலாலம்பூரை யும் இணைக்கும் 350 கி.மீ. அதி வேக ரயில் திட்டத்தை சிங்கப்பூரும் மலேசியாவும் அமைத்து வரு கின்றன. இந்தத் திட்டம் 2026 முடிவில் செயல்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக் கிறது. இந்த ரயில் செயல்படும் போது சிங்கப்பூரிலிருந்து கோலா லம்பூருக்கு 90 நிமிடங்களில் சென்றுவிடலாம்.

சீனாவில் சென்ஸ்டைம்ஸ் நிறுவனத்திற்குச் சென்ற பிரதமர் லீ சியன் லூங்கிற்கு அந்த நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். சென்ஸ்டைம்ஸ் நிறுவனம் முக அடையாள தொழில்நுட்பம், போக்குவரத்துக் கண்காணிப்பு மென்பொருள் முதலானவற்றில் ஒருமித்த கவனம் செலுத்துகிறது. படம்: சாவ் பாவ்