You are here

தீபாவளிச் சந்தைக்கு வருகையளித்த அதிபர் ஹலிமா

  • படம்: திமத்தி டேவிட்

சுதாஸகி ராமன்

சிங்கப்பூரின் எட்டாவது அதிபராகக் கடந்த வாரம் பொறுப்பேற்ற திருவாட்டி ஹலிமா யாக்கோப் நேற்று மாலை லிட்டில் இந்தியா வட்டாரத்திற்குச் சென்றார். தீபாவளியை முன்னிட்டு அந்த வட்டாரத் தில் செய்யப்பட்டிருந்த அலங்காரங்களையும் கேம்பல் லேனிலுள்ள தீபாவளிச் சந்தை யையும் அவர் பார்வையிட்டார். இரவு நேரம் என்பதால் தீபாவளிச் சந்தையில் திரண்டு இருந்த மக்கள் அதிபரைக் கண்டதும் ஆனந்தமடைந்தனர். கடைகளுக்குப் பொருள் வாங்க வந்த பலரும் அதிபர் வந்திருப்பதை அறிந்ததும் ஆர்வத்துடன் சென்று அவரைப் பார்த்தனர். அதிபருடன் உற்சாகமாகக் கைகுலுக் கினர். சிலர் அதிபருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

அதிபருடனான சந்திப்பு அவர் களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாக அமைந் தது. கடைக்காரர்களுடனும் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் திருவாட்டி ஹலிமா பேசி தீபாவளிக்குத் தயாராகும் விதம் பற்றித் தெரிந்துகொண்டார். பின்னர் தீபாவளிச் சந்தைக்கு அருகில் உள்ள இந்திய மரபுடைமை நிலையத்தை அவர் சுற்றிப் பார்த்தார். நிலையத்தின் முகப்பில் அதிபரை வர வேற்கும் விதமாக ‘ரிதம்ஸ் எஸ்தெத்டிக்ஸ்’ குழுவைச் சேர்ந்த மூன்று நடனமணிகள் நடனமாடினர். அம்மூவரும் இணைந்து மோகினி ஆட் டம், ஒடிசி நடனம், பரத நாட்டியம் ஆகி யவற்றைப் படைத்தனர். தீபாவளி அலங்காரத்தில் பாலர் பள்ளிப் பிள்ளைகளின் கலைப்படைப்புகளும் இடம் பெற்றுள்ளதை அறிந்த திருவாட்டி ஹலிமா அதுபற்றி அந்தப் பிள்ளைகளிடமே கேட்டுத் தெரிந்துகொண்டார். சிண்டாவின் ‘புரொஜெக்ட் கிவ்’ நன் கொடைத் திரட்டு நடவடிக்கையையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆண்டின் தீபாவளி சின்னம் யானை என்பதால் யானை உருவ பொம்மை கள் அதிபர் வரவேற்பு நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தன.

தம்மை வரவேற்கும் விதமாக ‘ரிதம்ஸ் எஸ்தெத்டிக்ஸ்’ நடனமணிகள் படைத்த நடனங்களையும் ‘டமாரு’ தாளவாத்தியக் குழுவினரின் படைப்பையும் அதிபர் ஹலிமா யாக்கோப் தமது கணவருடன் பார்த்தும் கேட்டும் ரசித்தார். படம்: திமத்தி டேவிட்