You are here

அழகுராணிகளின் அணிவகுப்பு

  • ருத்ரா ராமதாஸ் படம்: பெர்ரிஹேப்பி ஃபோட்டோகிராபி

சுதாஸகி ராமன்

‘உலக அழகி’ போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும், ‘மிஸ் வோர்ல்ட் சிங்கப்பூர்’ போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இவ்வாண்டு தகுதி பெற்றிருக்கும் 10 பேரில் ஐவர் தமிழ்ப் பெண்கள். தற்போது நடைபெற்றுக்கொண் டிருக்கும் ‘மிஸ் வோர்ல்ட் சிங்கப்பூர்’ போட்டியில் பங்கேற்கும் லான்யா அசோகன், சரண்யா தேவராஜன், நிவித்ரா நிரோ‌ஷினி நிக்ஸிட், ரீக்கா வனிஷா, விஜயஸ்ரீ விஜயந்திரன் ஆகியோர் இந்த ஐவர். கடந்த இரண்டு மாதங்களாகப் போட்டிகளில் பங்கேற்று வரும் இவர்கள் உடற்பயிற்சி, ‘ஹை ஹீல்ஸ்’ காலணிகளுடன் நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு அடுத்த மாதம் முதல் தேதி நடைபெறும் இறுதிச்சுற்றுக்காகத் தயாராகி வருகின்றனர். இந்தப் போட்டியில் வாகைசூடும் போட்டி யாளருக்கு ‘மிஸ் வோர்ல்ட் சிங்கப்பூர்’ பட்டம் கிட்டுவதுடன், சிங்கப்பூரைப் பிரதிநிதித்து அடுத்த மாதம் சீனாவில் நடைபெறும் ‘மிஸ் வோர்ல்ட்’ போட்டியில் பங்கேற்க வாய்ப்பும் கிடைக்கும்.

“அழகை மட்டுமின்றி போட்டியாளர் நடந்துகொள்ளும் முறை, சவால்களை எதிர் கொள்ளும் முறை போன்றவற்றையும் கருத்தில் கொண்டு போட்டியின் வெற்றியாளரை ‘மிஸ் வோர்ல்ட் சிங்கப்பூர்’ போட்டிகளின் இயக்கு நரும் நடுவருமான எடெலின் ஹொகுலானி தேர்வுசெய்கிறார்,” என்றார் ஷரண்யா, 22. கண்டிப்பான பெற்றோரின் ஒரே பிள்ளை யான ஷரண்யா, குற்றவியல் துறையில் பட்டக் கல்வி மேற்கொள்ள இருக்கிறார்.

கடந்த ஆண்டு இப்போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசை வென்ற 21 வயது லான்யாவுக்கு அந்த வெற்றியில் திருப்தி இல்லை. இவ்வாண்டு போட்டியில் கலந்து கொள்வதற்குத் தமக்கு அழைப்பு விடுக்கப் பட்டதாக லான்யா தெரிவித்தார்.

ருத்ரா ராமதாஸ் படம்: பெர்ரிஹேப்பி ஃபோட்டோகிராபி