You are here

அஸ்வின், ஜடேஜாவை ஓரங்கட்ட முயற்சி

  • அசாருதீன்

புதுடெல்லி: ஆஸ்திரேலிய கிரிக் கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற் காக இந்தியா வந்துள்ளது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர்த் தொடரில் முக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இருவரும் இடம்பெறாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற் றத்தை அளித்தது. ஏற்கெனவே இருவருக்கும் இலங்கை தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இத னால் இந்த இருவரையும் தேர்வுக் குழு ஒருநாள் போட்டியில் இருந்து ஒரங்கட்ட முயற்சி செய்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஆஸ்தி ரேலியா தொடரில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அணித்தலைவர் அசாருதீன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். “இலங்கை தொடரில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப் பட்டதைப் புரிந்து கொள் ள மு டி கி ற து . ஆனால் ஆஸ்திரேலியா போன்ற சிறந்த அணிக்கு எதிரான போட்டியில் இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது

சரியான முடிவு அல்ல. “இந்த இரண்டு சுழற்பந்து வீரர்களின் பங்களிப்பு இருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் விளையாட வாய்ப்புக் கொடுத் திருக்க வேண்டும். “நான் அணித் தலைவராக இருந்தால் உள்ளூரில் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின், ஜடேஜாவை தேர்வு செய்ய வைத்து இருப்பேன். “வீராத் கோஹ்லி தலைமை யிலான இந்திய அணி தற்போது மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டியில் ரெய்னா மீண்டும் தேர்வு ஆவார். “அனுபவம் வாய்ந்த அவர் மிகவும் தொடரில் சிறப்பாக செயல்படக்கூடியவர்” என்றார் அசாருதீன்.