You are here

கெடா மன்னருக்கு அமைச்சர் விவியன் இறுதி அஞ்சலி

  • படம்: ஃபேஸ்புக்

மலேசியாவின் கெடா மாநில மன்னர் காலமானதைத் தொடர்ந்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் அங்கு சென்று தமது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார். கெடா மாநில மன்னர் அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷாஹ் நேற்று முன்தினம் தமது 89ஆவது வயதில் அலோர் ஸ்டாரில் காலமானார். அதைத் தொடர்ந்து மறைந்த மன்னருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேற்று அலோர் ஸ்டாரில் உள்ள அவரது மாளிகைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். மலேசியாவின் துணைப் பிரத மர் அகமது ஸாஹிட் ஹமிடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் சிலாங்கூர் மன்னர் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா, பேராக் மன்னர் உள்ளிட்ட பிற மாநில மன்னர்களும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களும் தங்கள் இறுதி அஞ்சலியை நேற்று மன்னருக்குச் செலுத்தினர்.

மறைந்த கெடா மன்னருக்கு அஞ்சலி செலுத்தும் அமைச்சர் விவியன் (வலம் இருந்து 2ஆவது) படம்: ஃபேஸ்புக்