You are here

பொதுச் செயலர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம்

தமிழகத்தின் ஆளுங்கட்சி யான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தி லிருந்து (அதிமுக) சசிகலா நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, அதிமுக வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப் பட்டது செல்லாது என்று நேற்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனி கட்சியின் பொதுச் செயலாளராக யாரும் நியமிக்கப் படமாட்டார்கள் என்ற முடிவும் எடுக்கப்பட்டது. அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் தமிழகத் தின் முன்னாள் முதல்வருமான அமரர் ஜெயலலிதாதான் கட்சி யின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அனைவரும் தொடர்ந்து தங்கள் பதவிகளை வகிப்பர் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் டிடிவி. தினகரன் செய்த அறிவிப்புகள் அனைத்தும் கட்சியால் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர் செய்த நியமனங் கள் செல்லாது என்றும் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். தழிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களும் ஒன்றிணைவது மட்டுமல்லாது கட்சியின் இரட்டை இலை சின்னமும் மீட்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பொதுக்குழு நடைபெறும் அரங்கிற்குள் நுழைய முயற்சி செய்யும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் ஆகியோரைத் தடுத்து நிறுத்தும் போலிசார். அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது. படம்: சதிஷ்