You are here

விரைவில் நெட்ஸ் செயலி முறை அறிமுகம்

நெட்ஸ் செயலி வழி கட்டணத்தைச் செலுத்தும் புதிய முறை அக்டோபர் மாதம் அறிமுகம் காண உள்ளது. மின்னியல் முறையில் வங்கி அட்டையை கைபேசியில் நிறுவி அதனைக் கொண்டு இச்சேவை ஏற்றுக்கொள்ளப்படுகிற கட்டண முனையத்தில் கட்டணத்தைச் செலுத்தும் முறை பயனீட்டாளர் களை வந்தடைய உள்ளது. ‘நெட்ஸ் பே’ எனப்படும் செயலியைப் பயன்படுத்தி நேரடி யாக வங்கி அட்டை இல்லாமல் கட்டணத்தைச் செலுத்தலாம். முதற்கட்டமாக ‘நெட்ஸ் பே’ ஒரு வங்கியை இச்சேவையில் இணைத்து செயல்பட இருக் கிறது. அது எந்த வங்கி என்று தற்சமயம் குறிப்பிடவில்லை.

ஆனால், தொடரும் வாரங் களில் மற்ற வங்கிகளும் இதில் இணையும் எனத் தெரிவிக்கப் பட்டது. டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி, எச்எஸ்பிசி, மேபேங்க், ஸ்டாண்டர்ட் சார்டட் ஆகிய வங்கிகள் இச்சேவையில் இணையும். இதே வேளையில், நெட்ஸ் திறன் பட்டைகள், திறன் கைக் கடிகாரங்கள் வழி கட்டணம் செலுத்து முறைகளும் அடுத்த டுத்து நடப்புக்கு வர இருக்கின்றன. இந்நிலையில், தற்சமயம் இந்த புதிய முறையில் கட்டணம் ஏற்றுக்கொள்ளும் 30,000 முனையங்கள் தயார்நிலையில் இருக்கின்றது. இவ்வாண்டு இறுதிக்குள் 60,000 கட்டண முனையங்கள் தயாராகிவிடும் என நெட்ஸ் தெரிவித்தது. அறிவார்ந்த சிங்கப்பூர் திட்டத்தின் அடிப்படையில் ரொக்கமில்லா கட்டண முறையை நாடு முழுதும் நடைமுறைப் படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சியில் நெட்ஸ் தனது பங்கைச் செவ்வனே ஆற்றும் எனவும் நெட்ஸ் நேற்று அறிவித்தது.